கோர்ட்டு கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி

கோர்ட்டு கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தும் வசதியை தலைமை நீதிபதி தனபால் தொடங்கி வைத்தார்

Update: 2020-05-27 23:33 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கோர்ட்டில் வழக்கு தொடர்பான கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். தலைமை நீதிபதி தனபால் கலந்துகொண்டு இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதியை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும்போது, ‘பல மாநிலங்களில் இதுபோன்ற வசதி உள்ளதாகவும், புதுவையில் தற்போது இந்த வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் ஜூலியட் புஷ்பா, தலைமைக் குற்றவியல் நீதிபதி தாமோதரன், கணக்கு மற்றும் கருவூலத் துறை இயக்குனர் வாசுகி, புதுவை வக்கீல்கள் சங்கத் தலைவர் முத்துவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்