நிலுவைத் தொகையை வழங்க கோரி அரசு ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி-காரைக்கால் அரசு ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம், கட்டுமான சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-27 22:45 GMT
காரைக்கால்,

ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான சங்க மாநில செயலாளர் அன்பழகன், புதுச்சேரி-காரைக்கால் அரசு ஒப்பந்ததாரர் நல சங்க அமைப்பாளர் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கடந்த நிதியாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை 150-க்கும் மேற்பட்ட வேலைகள் தொடங்கப்பட்டன. இதில் 80 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. ஆனால் இந்த பணிகளுக்கான தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் பல்வேறு பணிகளை வேறு ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்து செல்வது கண்டனத்திற்குரியது.

இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளோம். எனவே அனைத்து ஒப்பந்ததாரர்களுக்கும் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்