வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2020-05-27 22:15 GMT
பாவூர்சத்திரம்,

பாவூர்சத்திரம் அருகே செட்டியூர் கோணவிளையூர் பகுதியை சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 47). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதில் மனமுடைந்த தங்கச்சாமி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

களக்காடு அருகே உள்ள வடமலைசமுத்திரத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (56). மாடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டாம். மேலும் அவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. அதற்காக அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த சண்முகசுந்தரம், கேசவநேரி குளம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்