வடமதுரை அருகே இருதரப்பினர் மோதல்; 12 பேர் கைது
வடமதுரை அருகே இருதரப்பினர் மோதல் நடந்தது. இதில் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை,
வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 25). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள கன்னிமார் கோவில் அருகே தனது நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தொட்டணம்பட்டியை சேர்ந்த சிலர் அந்த பகுதியில் மதுகுடித்துக்கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அழகர்சாமி மற்றும் அவருடைய நண்பர்கள் மதுகுடித்தவர்களை தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். பின்னர் இதுகுறித்து இரு தரப்பினரும் வடமதுரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் மோதலில் ஈடுபட்டதாக முகமது ஆசிப் (21), இம்ரான்கான் (26), இசாத்அகமது (22), லிங்கசாமி (19), லோகநாதன் (19), அழகர்சாமி உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.