கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம்

கோவில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தை இந்து முன்னணியினர் நடத்தினர்.

Update: 2020-05-26 23:10 GMT
புதுச்சேரி,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது ஊரடங்கு தளர்வு காரணமாக வர்த்தக நிறுவனங்கள், மதுபான கடைகள் என பல்வேறு வியாபார நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் புதுவையில் கோவில்களை திறக்க வேண்டும் என்று இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் முன்பு நேற்று இந்து முன்னணியினர் தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு இந்து முன்னணியின் செயலாளர் சுனில் குமார் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ரமேஷ், பொருளாளர் செந்தில்முருகன், துணைத்தலைவர்கள் செல்வம், மணி, செயற்குழு உறுப்பினர் ராஜேஷ், சிவா, நகர தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்