மீன்சுருட்டி, ஆண்டிமடம் பகுதிகளில் கடையடைப்பு
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
மீன்சுருட்டி,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவின்படி, 5 பேருக்கு மேல் கூடுவது சட்டப்படி குற்றமாகும்.
இந்நிலையில், நேற்று மீன்சுருட்டி பகுதியில் உள்ள காடுவெட்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், மாநில வன்னியர் சங்க தலைவருமான குருவின் 2-ம் ஆண்டு நினைவு தினமாகும். இதில் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், வெளிமாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குருவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், டீ கடைகள் மற்றும் ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. குரு நினைவு தினத்தையொட்டி, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல, ஆண்டிமடம் பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.