செஞ்சியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையத்தில் சப்-கலெக்டர் ஆய்வு

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாற்றி வைக்கப்பட்டது.

Update: 2020-05-25 05:19 GMT
செஞ்சி,

 நாளை மறுநாள் (புதன்கிழமை) பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்காக செஞ்சி கல்வி மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் மையமாக செஞ்சியில் உள்ள ஸ்ரீதரணி இண்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சப்-கலெக்டர் அனு, விடைத்தாள் திருத்தும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு வரும் ஆசிரியர்களின் வசதிக்காக அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது செஞ்சி தாசில்தார் கோவிந்தராஜ், ஸ்ரீதரணி இண்டர்நேஷனல் பள்ளி தாளாளர் தண்டபாணி, தலைமை ஆசிரியர் கணபதி, கண்காணிப்பாளர் காஜா பாஷா, பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.

முன்னதாக செஞ்சி பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் முன்னிலையில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்