திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 9 பேர் ‘டிஸ்சார்ஜ்’

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 9 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

Update: 2020-05-21 04:21 GMT
திருச்சி,

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 9 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டனர்.

9 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 9 பேர் நேற்று குணமடைந்து அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தற்போது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 9 பேர் மட்டுமே கொரோனா வார்டில் சிகிச்சையில் உள்ளனர்.

டெல்லியில் இருந்து வந்தவர்கள்

கடந்த 18-ந்தேதி டெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் 328 பேர் திருச்சி வந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி அரபி கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில்அவர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் அவரவர் ஊர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்