கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 13 கோடி மனித வேலை நாட்கள் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்

பெங்களூரு,
கர்நாடகத்தில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் நடப்பு ஆண்டில் 13 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தொடர்பான ஆலோசனை கூட்டம் பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி ஈசுவரப்பா மற்றும் அத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
“கர்நாடகத்தில் நடப்பு ஆண்டில் கிராமப்புற வேலை உறுதி திட்டத்திற்கு 13 கோடி மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.6,315 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதே திட்டத்திற்கு மத்திய அரசு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது.
அதனால் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறித்த காலத்திற்குள் கூலியை பட்டுவாடா செய்ய வேண்டும். கொரோனா குறித்து கிராமங்களில் செயல்படையை அமைத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு கொண்டு போய் சேர்ப்பது, வீடு-வீடாக சென்று வீட்டு தனிமையில் உள்ளவர்களை கண்காணிப்பது போன்ற பணிகளை இந்த செயல்படையில் உள்ளவர்கள் மேற்கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்கள் 8 லட்சம் முகக்கவசங்களை தயாரித்து வினியோகம் செய்கிறது. இதன் மூலம் கிராமப்புற மக்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் பணியை செயல்படையினர் செய்ய வேண்டும்.
இந்த கோடை காலத்தில் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினை உள்ள 14 மாவட்டங்களில் 659 கிராமங்களுக்கு 389 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்வதாக அதிகாரிகள் கூறினார்கள். இந்த பணியை எந்த தடங்கலும் இன்றி சிறப்பான முறையில் செய்ய வேண்டும்.”
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
கூட்டத்தில் தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்