அன்னவாசல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

அன்னவாசல் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் நாசமாகின.

Update: 2020-05-20 06:18 GMT
அன்னவாசல், 

அன்னவாசல் நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் நாசமாகின.

நெல் கொள்முதல் நிலையம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பகுதிக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று அன்னவாசலில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் உம்பன் புயல் காரணமாக அன்னவாசல் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

வேதனை

இந்த மழையில் அன்ன வாசல் திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி உள்ளது. பாதுகாப்பு இல்லாததால் நெல் மூட்டைகள் நாசமாகி விட்டது. அன்னவாசலில் அரசுக்கு சொந்தமான கிடங்குகள் உள்ளது. அது போன்ற இடங்களில் மூட்டைகளை வைத்திருந்தால் இந்த மூட்டைகளை மழையில் நனையாமல் தடுத்திருக்கலாம் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்