56 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் புறப்பட்டு சென்றனர் கலெக்டர் தகவல்

தானே மாவட்டத்தில் இருந்து 56 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

Update: 2020-05-19 23:45 GMT
மும்பை,

மராட்டியத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். இதையடுத்து கடந்த 1-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர் செல்ல அனுமதி அளித்தது. இதற்காக போலீஸ் நிலையத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறலாம் என மராட்டிய அரசு அறிவித்தது.

இதனால் தானே மாவட்டத்தில் சிக்கி இருந்த 56 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் 21 ஆயிரத்து 475 பேரை 17 சிறப்பு ரெயில்களிலும், 34 ஆயிரத்து 485 பேரை 1,553 பஸ்கள் இயக்கப்பட்டு அனுப்பி வைத்ததாக மாவட்ட கலெக்டர் ராஜேஷ் நர்வேக்கர் தெரிவித்து உள்ளார்.

இதில் மாநிலம் வாரியாக குறிப்பிடுகையில் பீகார், ராஜஸ்தானிற்கு 3,494 பேரும், உத்தரபிரதேச மாநிலத்திற்கு 2,833 பேரும், மத்திய பிரதேசத்திற்கு 1,652 பேரும், ஜார்கண்ட் மாநிலத்திற்கு 1,500 பேரும், ஒடிசாவிற்கு 1,364 பேரும் சிறப்பு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் பயணம் செய்த வெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் சிக்கி உள்ள மற்ற தொழிலாளிகளை அனுப்புவதற்கு அனுமதி அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்