சென்னிமலையில் இருசக்கர வாகனத்தில் வேப்பிலை கட்டி பயணிக்கும் போலீஸ்காரர்

சென்னிமலை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் தமிழ்செல்வன். இவர் சென்னிமலை பகுதியில் 6 இடங்களில் உள்ள மாவட்ட எல்லை சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2020-05-19 05:03 GMT
சென்னிமலை, 

பாதுகாப்பு பணிக்கு தினமும் அங்கு சென்று வருகிறார். அப்போது பலரையும் சந்திக்கும் நிலை ஏற்படுவதால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என அவர் கருதினார். எனவே கொரோனா வருவதை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் முக கவசம் அணிந்து, கிருமிநாசினி பயன்படுத்தி வருகிறார். 

மேலும் வேப்பிலையை தனது இருசக்கர வாகனத்தின் முன்பகுதியில் கட்டி வைத்து பயணம் செய்து வருகிறார். இதேபோல் சென்னிமலையில் பெரும்பாலான வீட்டு வாசல்கள் மட்டுமின்றி கடை வாசல்களிலும் கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் வேப்பிலைகளை வைத்துள்ளன

மேலும் செய்திகள்