விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது; கே.எஸ்.அழகிரி பேட்டி

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2020-05-19 02:50 GMT
அரசூர், 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட மாணவி ஜெயஸ்ரீயின் குடும்பத்திற்கு நேற்று மாலை தமிழக காங் கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினார்.அதன் பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

மாநில அரசு, இரு குடும் பத்திற்கும் இடையே கடந்த 7 வருடங்களுக்கு முன்பு ஏற் பட்ட முன்விரோத பிரச்சினை களை தீர்க்க காவல்துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த கொலை நடந்திருக்காது. மத்திய அரசு, மின்சாரத்தை இலவசமாக தர முடியாது என்று கூறுகிறது. மாநில அரசு உடனடியாக இலவச மின்சாரத்தை தடை செய்ய வேண்டும் என்று மிக கடுமையான முடிவை எடுத்திருக்கிறது.

மத்திய அரசு, லாப நஷ்ட கணக்கு போட்டு அதை இலவசம் எனக்கருதி தடை செய்தால் விவசாய உற்பத்தி பொருட்களின் விலை குறைந்து போகும். உணவு தானிய உற்பத்தி குறைந்து போகும். மீண்டும் சோவியத் அமெரிக்க நாடுகளை நாடவேண்டி வரும். எனவே மோடி அரசும், தமிழக அரசும் இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது. அதையும் மீறி இலவச மின்சாரம் ரத்து என்ற முடிவை எடுத்தால் தமிழகத்தில் இருக்கிற விவ சாயிகளின் பிணத்தின் மீது நடந்து சென்றுதான் தடை செய்ய முடியும். வேறு அதிகாரத்தால் முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் ஆர்.டி.வி. சீனிவாசக்குமார், மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய உறுப்பினர் சிறுவை ராமமூர்த்தி, மாநில பொதுக் குழு உறுப்பினர் சிவா, மாவட்ட எஸ்.சி. பிரிவு தலை வர் சுரேஷ்ராம் ஆகியோர் உடனிருந்தனர்.

இதற்கிடையில் 144 தடை உத்தரவை மீறியதாக கே.எஸ்.அழகிரி உள்பட காங்கிரஸ் கட்சியினர் 10 பேர் மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்