திருவண்ணாமலை மாவட்டத்தில், 167 டாஸ்மாக் கடைகள் திறப்பு - நீண்ட வரிசையில் நின்ற மதுபிரியர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 167 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நீண்ட வரிசையில் நின்று மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
திருவண்ணாமலை,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப் பட்டன. பின்னர் நிபந்த னைகள் எதையும் அரசு பின் பற்றவில்லை என்று மறுநாளே டாஸ்மாக் கடைகளை மூட சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து டாஸ்மாக் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
தொடர்ந்து நேற்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட் டத்தில் 215 கடைகள் உள்ளது. இதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கடைகளை தவிர மீதமுள்ள இடங்களில் உள்ள 167 டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டது.
டாஸ்மாக் கடைகளில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மட்டுமின்றி சில கடைகளில் முன்னாள் ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு கடையில் ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மதுபானம் வழங்கும் வகையில் டோக்கன்கள் வழங்கப்பட் டது. மதுபிரியர்கள் காலை 9 மணி முதலே நீண்ட வரிசை யில் நின்று மதுபானங்கள் வாங்கி சென்றனர்.
மதுபானங்கள் வாங்க எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாததால் மது பிரியர்கள் கட்டை பைகளி லும், மூட்டைகளிலும், பைகளி லும் மதுபான பாட்டில்களை வாங்கி சென்றனர். சில கடை களில் போதிய மதுபானங்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப் பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபானங்கள் விலை 15 சதவீதம் உயர்த்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட் டத்தில் சில கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்கள் விற்பனை செய்யப் படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வழக்கமாக திருவண்ணா மலை மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் ரூ.2½ கோடியில் இருந்து ரூ.3 கோடி வரை மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். 6 நாட்களுக்கு பிறகு மதுபிரியர்கள் மது பானங்கள் வாங்கி சென்றால் எப்படியும்வழக்கத்தை விட ரூ.1 கோடிக்கு கூடுதலாகவே மதுபான விற்பனை நடைபெற்று இருக்கும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை நேற்று காலை 10 மணிக்கு திறந்தபோது ஏராள மான மதுபிரியர்கள் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலையும் பொருட் படுத்தாமல் மதுபாட்டில்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
இதேபோல் அழகுசேனை, ஆண்டிப்பாளையம் கூட் ரோடு, வண்ணாங்குளம், பட்டாங்குளம் பகுதிகளில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் ஏராள மானவர்கள் மதுபாட்டில்கள் வாங்கிச் சென்றனர். அந்தந்த இடங்களில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
கீழ்பென்னாத்தூர் தாலுகா வில் கீழ்பென்னாத்தூர், மேக்களூர், வேட்ட வலம், தளவாகுளம், இசுக்கழி, அண்டம்பள்ளம் ஆகிய 6 பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டி ருந்தது. மதுபிரியர்கள் வரிசையில் நின்று மதுபானங் களை வாங்கி சென்றனர்.
கீழ்பென்னாத்தூர் டாஸ் மாக் கடையில் மதுபானம் கையிருப்பு இல்லாததால் 12.30 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டது. அப்போது லாரியில் வந்த மதுபானங்கள் கடையில் இறக்கப்பட்டு மதுபாட்டில்கள் விற்கப் பட்டன.
மதுபான கடைகள் இயங்குவதை தாசில்தார் ராம்பிரபு, திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, டாஸ்மாக் மேலாளர் சக்தி பிரேம்சந்தர் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.