130 கடைகள் திறப்பு: மதுபானம் வாங்க திரண்ட மதுப்பிரியர்கள் - மது பாட்டில்களை அள்ளி சென்றனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுபானம் வாங்க மதுப்பிரியர்கள் திரண்டனர்.
திண்டுக்கல்,
தமிழகத்தில் ஊரடங்கால் மூடப்பட்ட மதுக்கடைகள் கடந்த 7-ந்தேதி திறக்கப் பட்டது. மதுப்பிரியர்கள் போட்டி போட்டு மதுபானம் வாங்கினர். இதற்கிடையே ஊரடங்கு நேரத்தில் திறக்கப் பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மதுக்கடைகளை மூடும்படி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து மதுக்கடைகள் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் நேற்று மதுக் கடைகள் திறக்கப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட் டத்தை பொறுத்தவரை 155 மதுக்கடைகள் உள்ளன. கொரோனா பாதித்த பகுதி கள், நெரிசல் மிகுந்த பகுதி களில் உள்ள கடைகளை தவிர இதர கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து 145 மதுக்கடைகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மரக்கட்டைகள் மூலம் தடுப்புகள் அமைப்பதற்கு ஒருசில கடைகளில் போதிய இடவசதி இல்லை. இதனால் 130 மதுக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டன. கடந்த 7-ந்தேதி 110 மதுக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து மதுப் பிரியர்கள் முக கவசம் அணிந்து கொண்டு காலை யிலேயே, ஆர்வமுடன் மதுக்கடைக்கு படையெடுத் தனர். ஆனால், மதுக்கடை களில் டோக்கன் மற்றும் கைகழுவுவதற்கு கிருமிநாசினி மருந்து வழங் கப்பட்டது. இதையடுத்து சமூக இடை வெளியை கடைபிடிக்கும்படி அறிவுறுத்திய பின்னரே மதுபானம் விற்கப்பட்டது.
இதனால் காலையில் பெரும் பாலான மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் மதுப் பிரியர்கள் காத்திருந்தனர். முககவசம் அணிந்தபடி குடி மகன்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இடுப்பில் சொருகியபடியும், துண்டு, பைகளில் கட்டியபடியும் மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். சிலர் அட்டை பெட்டியுடன் மதுபாட்டில் களை வாங்கி சென்றது பார்க்க முடிந்தது.
அதேபோல் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபடுத்தப் பட்ட னர். மேலும் சமூக இடை வெளியை கடைபிடிக்கும்படி ஒலிபெருக்கியில் போலீசார் எச்சரித்தபடி இருந்தனர். எனினும், மாவட்டம் முழு வதும் மதுபான விற்பனை விறு விறுப்பாக இருந்தது. நேற்றைய தினம் மட்டும் ரூ.3½ கோடிக்கு மேல் மதுபானம் விற்பனை செய்யப் பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.