உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 27 வியாபாரிகளுக்கு அபராதம் 7 கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
உளுந்தூர்பேட்டையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 27 வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தும், 7 கடைகளை மூடவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை நகரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா?, பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே வருகிறார்களா? என்று ஆய்வு செய்வதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் ஆகியோர் நேற்று மதியம் வந்தனர். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து கடைவீதி வரையுள்ள அனைத்து கடைகளில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கிரண்குராலா, சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக குறியிடு வரையாததாலும் 27 வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தார். மேலும் அனுமதியின்றி திறக்கப்பட்டிருந்த 7 கடைகளை மூடவும் அவர் உத்தரவிட்டார். கடைகளின் வாசல் முன்பு கட்டாயம் கிருமி நாசினி மற்றும் கை கழுவுவதற்கு தண்ணீர் வைக்க வேண்டும் என கடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது தாசில்தார் காதர் அலி, துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அகிலன், ஜெயச்சந்திரன், வினோத்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
சின்னசேலம்
இதேபோல் சின்னசேலத்திலும் கலெக்டர் கிரண்குராலா ஆய்வு மேற்கொண்டார். அப்போது பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்களுக்காக சானிடைசர், கை கழுவ சோப்பு உள்ளிட்டவைகள் இல்லை. இதனால் வியாபாரிகளை கலெக்டர் கண்டித்தார். வரும் காலங்களில் கொரோனாவை தடுக்க அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடைகளை மூடி சீல் வைக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார். ஆய்வின்போது தாசில்தார் வளர்மதி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, சுமதி, செயல் அலுவலர் சந்திரகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.