சேலத்தில் கொரோனா தொற்று பாதித்த 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’

சேலத்தில் கொரோனா தொற்று பாதித்த 2 பேர் ‘டிஸ்சார்ஜ்’.

Update: 2020-05-15 04:37 GMT
சேலம்,

சேலத்தில் இந்தோனேசியா நாட்டை சேர்ந்த முஸ்லிம் மத போதகர்கள் 4 பேர் உள்பட 35 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் 31 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மீதமுள்ள 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இவர்களில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்த ஒருவரும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கைத்தட்டி மகிழ்ச்சியோடு, அவர்கள் 108 ஆம்புலன்சில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன், மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து சேலம் அரசு ஆஸ்பத்திரி டீன் பாலாஜி நாதன் கூறும்போது, சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 35 பேரில், இன்று (நேற்று) வரை 33 பேர் குணமடைந்து விட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாளை(இன்று) 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இதே போல தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், சென்னையில் இருந்து ஜலகண்டாபுரத்துக்கு வந்த சிறுவனும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள். இவர்கள் பாதிக்கப்பட்டது குறித்த தகவல் தர்மபுரி மற்றும் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது, என்றார்.

மேலும் செய்திகள்