தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது

தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்ளது.

Update: 2020-05-13 23:10 GMT
மும்பை, 

மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவி உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இந்த பகுதி தற்போது ஆட்கொல்லி கொரோனாவின் பிடியில் சிக்கி உள்ளது. 

இங்கு தினமும் நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இதில் நேற்று மட்டும் புதிதாக 66 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதில் அதிகபட்சமாக நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மற்றவர்கள் தர்க்கா சால், 90 அடி சாலை, காலகில்லா பிஸ்நாத் சால், நேரு நகர், விஜய்நகர், கிராஸ் ரோடு, கமலா நேரு சால், விஜய்நகர், கரிப்நகர், காம்தேவ்நகர், கும்பர்வாடா, சாஸ்திரி நகர், சுபாஷ் நகர், சாகிநபி சால், சோசியல்நகர், ஜனதா குடியிருப்பு, கேருசேத் சால், டோன்டு மிஸ்ட்ரி சால்(5 பேர்), டிரான்சிஸ்ட் கேம்ப், கணேஷ் விகாஸ் மண்டல், 60 அடி ரோடு, ஆசாத்நகர்(3 பேர்), சங்கராம் நகர், கீதாஞ்சலி நகர்(3 பேர்), பார்சி சால், சவுகாலே சால், சாகுநகர், கமலாராமன் நகர், முகுந்த் நகர், வைபவ் குடியிருப்பு, சந்த் கக்கயா மார்க், டோர்வாடா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

மேலும் தாராவியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,028 ஆகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

40 பேர் பலி

நேற்று இங்கு யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. எனினும் இதற்கு முன் பல்வேறு தேதிகளில் தாராவியில் உயிரிழந்த 8 பேர் கொரோனாவுக்கு பலியானது தற்போது தெரியவந்துள்ளதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கொரோனா ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்