ராசாம்பாளையத்தில் கொரோனா நிவாரண பொருட்கள்: எம்.எல்.ஏ.க்கள் வழங்கினார்கள்

ராசாம்பாளையத்தில் கொரோனா நிவாரண பொருட்களை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினார்கள்

Update: 2020-05-12 23:15 GMT
ஈரோடு, 

ஈரோடு மாநகராட்சி ராசாம்பாளையம் பகுதியில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். ராசாம்பாளையம், தென்றல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பகுதி செயலாளர்கள் ஜெகதீஸ், கேசவமூர்த்தி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் வீரக்குமார், பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் நந்தகோபால், நிர்வாகிகள் தங்கமுத்து, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்