சூளகிரியில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு
சூளகிரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்தனர். இதையடுத்து அவர்களிடம் முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காமராஜ் நகர் பகுதியில் கடந்த மே மாதம் 4-ந் தேதி 2 பெண்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் பிறகு 6-ந் தேதி ஓசூரில் 2 இளைஞர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 7-ந் தேதி சூளகிரியில் மேலும் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. 8-ந் தேதி சூளகிரியில் ஒரு இளைஞருக்கும், ஒரு பெண்ணுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் 10 பேரும், ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் உள்பட மேலும் 10 பேருக்கு கடந்த 9-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரும், அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். மேலும் அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர மறுப்பு தெரிவித்தனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் சிகிச்சைக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளருமான முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷேக் ரஷீத் மற்றும் அதிகாரிகள் காமராஜர் நகர் பகுதிக்கு சென்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அனைவரும் வீடு திரும்பலாம். உங்கள் யாருக்கும் கொரோனாவால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. எனவே உடனடியாக வீடு திரும்ப முடியும். ஆகவே அனைவரும் டாக்டர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தந்து சிகிச்சைக்கு செல்லவும் என்று கூறினர்.
மருத்துவமனையில் அனுமதி
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு 10 பேரும் சிகிச்சைக்கு ஓசூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு செல்ல சம்மதம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான 10 பேரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டு மருத்துவக்குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.