சிங்கம்புணரியை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா தொற்று இல்லை
சிங்கம்புணரியை சேர்ந்த 21 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கம்புணரி,
சென்னையில் இருந்து கடந்த 1-ந்தேதி 4 பேரை சிங்கம்புணரியை சேர்ந்த டிரைவர் காரில் அழைத்து வந்தார். அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் சிங்கம்புணரி டிரைவர், வாகன உரிமையாளர் மற்றும் அவர்களை சேர்ந்த 21 பேருக்கு கடந்த 7-ந் தேதி கொரோனா பரிசோதனை செய்தனர்.
பரிசோதனை முடிவில் 21 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை மூலம் அறிவிக்கப்பட்டது. அவர்களை வீடுகளில் சில நாட்கள் தனித்திருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் கொரோனா பரிசோதனை குறித்து சிங்கம்புணரி பகுதியில் உள்ள வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது சிங்கம்புணரி பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அவர்கள் தெரிவித்தனர். எனவே சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவதை பொதுமக்கள் கைவிடவேண்டும். போலீசார் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.