மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
பாகூர்,
புதுச்சேரி அரசு கோரிய நிவாரண தொகையை வழங்காத மத்திய அரசை கண்டித்தும், வேலையில்லாமல் வறுமையில் இருக்கின்ற அனைத்து ஏழை எளிய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கக்கோரியும் கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் பிரதேச செயலாளர் கலியன் தலைமையில் குருவிநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பிரதேச துணை தலைவர் சாம்பசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாகூர் கொம்யூன் செயலாளர் தமிழ்ச்செல்வம், பொருளாளர் அரிதாஸ் மற்றும் கந்தன், சேகர், சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பாகூர், சோரியாங்குப்பம், காட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் கம்யூனிஸ்டு கட்சியினர் பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். அதில் மத்திய அரசு அறிவித்த 12 மணி வேலை நேரத்தை உடனே ரத்து செய்ய வேண்டும், கொரோனா நிதியை புதுவை அரசுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றனர்.