கடலூர் மாவட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமை தாங்கி, நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தரமான உணவு
பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூலம் பொதுமக்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி மற்றும் பிளச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் தரமான உணவு, பாதுகாப்பான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.
நிவாரண பொருட்கள்
முன்னதாக கடலூர் உழவர் சந்தை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். மேலும் அரசு மருத்துவமனைகளில் நோய் தொற்று உள்ள நோயாளிகளுக்கு 66 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, சப்-கலெக்டர்கள் விசுமகாஜன், பிரவீன்குமார், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதா, நகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி, கடலூர் ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, முன்னாள் நகரசபை தலைவர் குமரன் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.