முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

வீரபாண்டி அருகே முன்விரோதத்தில் வாலிபரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Update: 2020-05-10 06:13 GMT
உப்புக்கோட்டை, 

வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 35). இவர், தனது நண்பர்களுடன் முல்லைப்பெரியாற்றின் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த போத்திராஜா, விக்கி, பால மணிகண்டன், முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் அமர்நாத்திடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கினர்.

இதைப்பார்த்த அமர்நாத்தின் நண்பரான விமல்குமார் அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவரை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து அமர்நாத் கொடுத்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான முன்விரோதத்தில் அமர்நாத் மற்றும் அவருடைய நண்பரை, போத்திராஜா உள்பட 4 பேரும் தாக்கிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்