கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 9 பேர் மீது வழக்கு

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-10 00:31 GMT
நாகப்பட்டினம், 

கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

9 பேர் மீது வழக்கு

இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் வருகிற 17-ந்தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறியதாக மாவட்டத்தில் 9 ஆயிரத்து 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 5 ஆயிரத்து 658 மோட்டார் சைக்கிள்கள், 84 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பியதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மதுவிலக்கு சோதனை நடத்தியதில் 562 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 545 பேர் கைது செய்யப்பட்டுள்ளனனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்