கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை. 9 கிராமங் களுக்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

Update: 2020-05-05 06:47 GMT
பெரம்பலூர், 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வு இல்லை. 9 கிராமங் களுக்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

எவ்வித தளர்வும் இல்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாக் கப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு குறித்து பரிசீலிக்கப் பட்டது. இதைத் தொடர்ந்து லெப்பை குடிகாடு, அத்தியூர் மற்றும் துங்கபுரம் பகுதிகளில் காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவை களுக் காக கடைகள் திறக்க அனு மதிக்கப்படும். மேலும் பாது காக்கப்பட்ட பகுதி களில் மீன் மற்றும் இறைச்சி விற்பனை முற்றிலுமாக தடை செய்யப் பட்டு உள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பெரம்பலூர் மாவட் டத்தில் புதிதாக கொரோனா வைரசின் தாக்குதல் அதி கரித்து வருவதால் ஊரடங்கில் எவ்வித தளர்வும் வழங்கப் படவில்லை.

9 கிராமங்களில் முழு ஊரடங்கு

மேலும், புதியதாக கொரோனா வைரஸ் தொற்று அறியப்பட்ட பகுதிகளான நல்லறிக்கை, கொளத்தூர், இலுப்பைக்குடி, திம்மூர், அருணகிரிமங்கலம், சில்லக்குடி, புதுவேட்டக்குடி, நன்னை, கீழபெரம்பலூர் ஆகிய 9 கிராமங்களில் நாளை (புதன்கிழமை) வரை முழு ஊரடங்கு அமல்படுத் தப்பட்டுள்ளது. இக்காலத்தில் அப்பகுதியை சேர்ந்த எவரும் வெளியே செல்ல அனுமதிக் கப்பட மாட்டார்கள். மேலும் வெளி நபர்களும் அப்பகுதி களுக்கு செல்ல தடை விதிக்கப் பட்டு உள்ளது. ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறுவோர் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். ஊரடங்கு காலத்தில் மாவட்ட நிர்வாக அறிவிப்பை மீறி கடைகள் திறந்தால் உடனடியாக சீல் வைக்கப்பட்டு, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப் படும். பெரம்பலூர் மாவட் டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நடவடிக் கையாக ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் முன்னதாக அறிவிப்பு செய்யப்படும். எனவே பொதுமக்கள் கொரோனா வைரசின் தீவிரம் அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஊரடங்கு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும். பெரம்பலூரை கொரோனா தொற்று இல்லாத மாவட்ட மாக மாற்றிட, பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மேற் கொள்ளும் நடவடிக்கை களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்