ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு எதிரொலி: இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் வாகனங்களில் வலம்வந்த பொதுமக்கள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் வாகனங்களில் பொதுமக்கள் வலம் வந்தனர்.

Update: 2020-05-05 04:30 GMT
மணப்பாறை, 

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் வாகனங்களில் பொதுமக்கள் வலம் வந்தனர்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப் படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள் ளது. அதன்படி வருகிற 17-ந்தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தி உள்ளது. இதனால் திருச்சி மாவட்டத் தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் (தடைசெய்யப் பட்ட பகுதிகள் தவிர) 40 நாட்களுக்கு பின்னர் நேற்று எலக்ட்ரிக்கல் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், செல்போன் பழுது நீக்கும் கடைகள், மரக்கடைகள், ஓட்டல்கள் போன்றவை திறக்கப்பட்டு செயல்பட தொடங்கின. இதனால் 40 நாட்களாக வீட்டிற்குள் முடங்கி இருந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைவீதிகளில் குவிந்தனர்.

மணப்பாறை, வையம்பட்டி

இதுபோல் மணப்பாறை, வையம்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் அதிக அளவில் கடைகள் திறந்திருந்தன. இங்கு வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. திண்டுக்கல் சாலையில் வங்கிகள் செயல்படும் பகுதியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. பலர் முககவசம் அணியாமல் வாக னங்களிலும், கடைவீதியிலும் உலா வந்ததை காண முடிந்தது. இதே நிலை நீடித்தால் தொற்று இல்லாத பகுதியாக உள்ள மணப்பாறை நகராட்சிப் பகுதியும் கொரோனா தொற்றிற்கு ஆட்பட்டு விடும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்தனர்.

துவாக்குடி

திருவெறும்பூர், துவாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 7 மணி முதலே அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. இதேபோல் கட்டிட வேலைகளுக்கு ஆட் களை பிரித்து அவரவர் வேலை பார்க்கும் இடங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் காரணமாக திருவெறும்பூர் பகுதியில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதி யது.

தொட்டியம்

தொட்டியம் பகுதியில் ஊரடங்கு தளர்த்தப்படாத தால் தொட்டியம், மணமேடு, கொளக்குடி, பாலசமுத்திரம் பகுதிகளில் நேற்று கடைகள் எப்போதும் போல் ஒரு மணிக்கே அடைக்கப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின் பற்ற போவதாக அப்பகுதி வணிகர்கள் தெரிவித்தனர். ஒரு சில கடைகள் மட்டும் 5 மணி வரை திறந்திருந்தன.

மேலும் செய்திகள்