வெளிமாநிலங்களில் இருந்து வந்த காய்கறி லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரிசோதனை
புதுவை புதிய பஸ் நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி ஏற்றி வந்த லாரி டிரைவர்களுக்கு கொரோனா பரி சோதனை மேற் கொள்ளப்பட்டது.
புதுச்சேரி,
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வியா பாரம் செய்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து மக் களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. கோயம்பேட்டில் பணி புரிந்த வர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென் றுள்ள நிலையில் அங்கும் கொரோனா தாக்கம் அதிக மாக உள்ளது.
இந்த நிலையில் புதுவை புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற் காலிக காய்கறி மார்க் கெட்டுக்கு காய்கறி ஏற்றி வந்த லாரி டிரைவர்கள், துப்புரவு பணியாளர்கள், காய்கறி கடை ஊழியர்கள் என 110 பேருக்கு நேற்று கொரோனா பரி சோதனை மேற்கொள்ளப் பட்டது. புதுவை மருத்துவக் குழுவினர் காய்கறி மார்க்கெட் டுக்கு நேரடியாக வந்து இந்த பரிசோதனைகளை மேற் கொண்டனர்.
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர் களிடம் கூறியதாவது:-
மோசமான நிலையை...
புதுச்சேரி மாநிலத்தில் 4 லட்சத்து 35 ஆயிரம் குடும்பங் களுக்கு சோதனை மேற் கொள்ளப்பட்டு உள்ளது. தற் போது புதுவை அருகில் உள்ள கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. புதுவையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இங்குள்ளவர்கள் அந்த மாவட்டங்களுக்கும், அங்குள்ளவர்கள் புதுச்சேரிக் கும் வருகிறார்கள். இதனால் புதுவை மக்கள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.
எனவே புதுச்சேரி வந்த 110 பேருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இவ்வளவு நாள் நாம் பட்ட கஷ்டம் வீணாகி விடும். அந்த மோச மான நிலையை அடைவதற்குள் நாம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங் கினை தளர்த்தி விட்டார்கள் என்று மக்களும் ரோட்டுக்கு வரக்கூடாது.
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.