சென்னையில் இருந்து வந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் விருத்தாசலத்தில் கலெக்டர் அன்புசெல்வன் பேட்டி
சென்னையில் இருந்து வந்த 700 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று விருத்தாசலத்தில் கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்தார். மேலும் வெளிநபர்கள் வருகை குறித்து பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விருத்தாசலம்,
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து கடலூர் மாவட்டத்துக்குள் வருபவர்களை கண்காணிக்கும் வகையில் சோதனைச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் மங்கலம்பேட்டையில் உள்ள சோதனை சாவடியில் நேற்று மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்துயாரும் கடலூர் மாவட்டத்திற்குள் நுழையாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறி நுழைந்தால் அவர்களை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என ஆலோசனை கூறினார். அதை தொடர்ந்து அவர் வேப்பூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
700 பேர் வரைக்கும் வருகை
விருத்தாசலம் ஆலடி சாலையில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு கல்லூரி மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு, கலெக்டர் அன்புசெல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் இருந்தும் நமது மாவட்டத்திற்கு 600 முதல் 700 பேர் திடீரென வந்துள்ளனர். சென்னை கோயம்பேட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் புதிதாக வந்தவர்களுக்கும் அந்த தொற்று இருக்கலாம் என்ற தகவலின் பேரில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சமூக பரவலாக மாறும் நிலை
சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு தொற்று இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அவர்களால் அவர்களுடைய குடும்பத்தினரையும் இந்த தொற்று, தாக்கும் அபாய நிலை உள்ளது. மேலும் அந்த கிராமத்திலும் தொடர் தொற்று ஏற்பட்டு சமூக பரவலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் வெளி மாநிலங்களிலிருந்து அல்லது வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் குறித்து தகவலை கிராம நிர்வாக அலுவலர் அல்லது தாசில்தார், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண் 1077 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவ்வாறு செய்தால் பெரிய உதவியாக இருக்கும். இவ்வாறு வெளியூர்களிலிருந்து 700 பேர் வரைக்கும் வந்துவிட்டார்கள் என பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. எந்த நிலைமையையும் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
ஒத்துழைக்காதவர்கள் மீது நடவடிக்கை
பொதுமக்களை காக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் புதிதாக வந்தவர்களை தனிமைப்படுத்தி அந்தந்த பகுதியில் உள்ள மாணவர் விடுதிகளில் தங்க வைத்து கண்காணிக்கப்படுகிறார்கள். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
மருத்துவ குழுக்கள் நேரடியாக சென்று அவர்களுக்கு சோதனை செய்து, உமிழ்நீர் மாதிரி எடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதில் யாருக்கேனும் தொற்று இருப்பது உறுதியானால் அவர்களை உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பொது மக்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்கப்படும்.
வெளியிலிருந்து வந்தவர்கள் மருத்துவ சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு கொடுக்காத நபர்கள் மீது வழக்கு தொடர்வதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விருத்தாசலம், வேப்பூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்ட, 26 பேர் குணமடைந்து விட்டனர். இந்த நிலையில் தற்போது புதிதாக 9 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 7 பேர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர்கள்.
முழு ஊரடங்கு
தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து நபர்களுக்கும் தொடர்ந்து உமிழ்நீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை போல இன்றைய ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையை போலவே இந்த வாரமும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒருவர் கூட வீட்டை விட்டு வெளியில் வராமல் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த ஊரடங்கை பயன்படுத்தி அனைத்து வருவாய் கிராமங்கள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்படும்.
கடலூர் மாவட்ட பொதுமக்கள் ஏற்கனவே முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கூறினார்.
ஆய்வின்போது சப்-கலெக்டர் பிரவீன்குமார், தாசில்தார் கவியரசு, நகராட்சி ஆணையாளர் பாண்டு, விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வளர்மதி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.