பண்ருட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி
பண்ருட்டியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தட்டாஞ்சாவடி கொக்குப்பாளையத்தை சேர்ந்த 64 வயதான மூதாட்டி ஒருவர் வயிற்றுப்போக்கு பிரச்சினை தொடர்பாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு காய்ச்சல் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் ஜிப்மரில் உள்ள தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார்.
மகன்-மருமகளுக்கும் உறுதி
இதற்கிடையே சமீபத்தில் அவர் சென்னை சென்று வந்தது தெரியவந்தது. இதற்கிடையே அவருடைய மகன், மருமகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் அவர்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதியில் தடுப்பு வேலி அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட 3 பேருடன் தொடர்பில் இருந்த 17 பேர் கண்டறியப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த பண்ருட்டி பகுதியை சேர்ந்த 150 பேர் பண்ருட்டி பணிக்கன்குப்பத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி விடுதியிலும், ராமநத்தம், வேப்பூர் பகுதியை சேர்ந்த 20 பேர் அப்பகுதியில் உள்ள கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.