விளைபொருட்களை கட்டணம் இன்றி கிட்டங்கிகளில் இருப்பு வைக்கலாம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய விளைபொருட்களை கட்டணமின்றி கிட்டங்கிகளில் இருப்பு வைக்கலாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

Update: 2020-05-01 23:00 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், தூத்துக்குடி, கடம்பூர், கோவில்பட்டி, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம், புதூர், சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் சொந்த கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகளின் நலன்கருதி, அவர்களின் விளைபொருட்களை வருகிற 31-ந்தேதி வரை எந்தவித வாடகையும் இன்றி ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கிகளில் சேமித்து வைக்கவும், சேமித்து வைக்கும் விளைபொருட்களின் பேரில் எந்தவித வட்டியும் இன்றி விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் பொருளட்டு கடன் பெறவும், குளிர்பதன கிட்டங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை கட்டணமின்றி இருப்பு வைத்து பயன்பெறலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

விவரங்களுக்கு...

மேலும் வணிகர்கள் விற்பனைக்குழுவுக்கு செலுத்தும் ஒரு சதவீதம் சந்தை கட்டணத்தில் இருந்தும் ஒரு மாத காலத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கிகளில் பொருட்களை சேகரித்து வைத்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர், மேற்பார்வையாளர்களை எட்டயபுரம் - 96261 85630, தூத்துக்குடி - 99420 09508, கடம்பூர் - 98657 73270, கோவில்பட்டி - 94429 64753, கழுகுமலை - 80728 01657, ஸ்ரீவைகுண்டம் - 89732 92789, புதூர் - 99941 24587, சாத்தான்குளம் - 97876 12127, விளாத்திகுளம் - 97860 11413 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்