ஆரல்வாய்மொழி பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
ஆரல்வாய்மொழி பகுதியில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி பகுதியில் நேற்று மாலை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெயில் வாட்டியது
ஆரல்வாய்மொழி பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஊரடங்கு காலமாக இருந்தாலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் வெளியில் செல்ல முடியாத வகையில் வெப்பம் வாட்டியது. வீட்டில் மினிவிசிறி இயங்கினாலும் புழுக்கம் அதிகமாக இருந்தது. எனவே வெப்பம் தாங்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
பலத்த மழை
ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன்புதூர், கண்ணன் புதூர், சந்தைவிளை, தாழக்குடி உள்ளிட்ட பகுதியில் நேற்று பிற்பகல் 3.15 மணி முதல் 4.15 மணி வரை ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
காற்று பலமாக வீசியது. ஆங்காங்கே சிறிய மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆரல்வாய்மொழி சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகனங்கள் தண்ணீரை சிதறடித்து சென்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.