கோவையில் முழு ஊரடங்கு நிறைவு: இன்று முதல் காய்கறி, மளிகை கடைகள் திறப்பு
கோவை மாநகராட்சி பகுதியில் நேற்றுடன் 4 நாள் முழு ஊரடங்கு நிறைவு பெற்றது. இன்று (வியாழக்கிழமை) முதல் காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்படுவதால் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கோவை,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சென்னை, கோவை, மதுரை உள்பட 3 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் முடிவடைந்தது. இதற்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட ஊரடங்கின்போது மளிகை, காய்கறி கடைகள் திறந்திருந்தன. ஆனால் கடந்த 4 நாட்களாக அந்த கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் கோவையில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊரடங்கு தடையையும் ஒன்றிரண்டு பேர் தான் மீறினார்கள்.
இந்த நிலையில் 4 நாள் முழு ஊரடங்கு நேற்றுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து இன்று(வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் மளிகைக்கடைகள் மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்படுகின்றன. எனவே கடைகளுக்கு வரும் பொதுமக்கள் பொருட்களை முண்டியடித்துக்கொண்டு வாங்குவதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
கோடுகள் வரையப்பட்டன
கோவை உக்கடம், காந்திபுரம் உள்பட பல்வேறு பஸ் நிலையங்களில் காய்கறி வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக, சமூக இடைவெளி கோடுகள் நேற்று வரையப்பட்டன. மேலும் கடை வீதிகள் மற்றும் மார்க்கெட்டுகளில் மக்கள் அதிகம் சேராமல் இருக்கும் வகையில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பொருட்களை வாங்க வருபவர்களை இடைவெளி விட்டு நிற்க அறிவுறுத்துமாறு கடைக்காரர்களை போலீசார் வலியுறுத்தி உள்ளனர். ஊரடங்கின்போது அவசியமில்லாமல் வாகனங்களில் வருபவர்களை கண்காணித்து வழக்கம் போல அபராதம் மற்றும் வழக்குப்பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அபராதம் வசூல்
கடந்த 26-ந் தேதி முதல் நேற்று வரை மாநகர பகுதியில் மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டனர். 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புறநகர் பகுதியில் 3 நாட்களில் 1,134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,320 பேர் கைது செய்யப்பட்டனர். 1,048 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.4 லட்சத்து 62 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.