பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணத்தில் பலத்த மழை மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு
பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணத்தில் பலத்த மழை பெய்தது. அப்போது மின்கம்பத்தில் மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பெண்ணாடம்,
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அதிலும் இந்த மாதம் ஆரம்பத்தில் வெயிலின் தாக்கம் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிகமாக இருந்தது. சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது. வெயிலுக்கு இதமாக அவ்வப்போது கோடை மழையும் பெய்து சற்று சூட்டை தணித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஆங்காங்கே கோடைமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பகுதியில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. சுமார் 3 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தது. பின்னர் 3.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதியிலும் தண்ணீர் தேங்கியது.
சாலையில் மரம் விழுந்தது
ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீட்டில் இருப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த மழைக்கு பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை கிராமத்தில் மெயின் ரோட்டில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று அடியோடு சாய்ந்தது. இந்த மரம் அருகில் இருந்த மின்கம்பம் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் மின் சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது அங்கு போக்குவரத்து இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே இதுபற்றி அறிந்த மின்ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பு கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதேபோல் ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி ஆகிய பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இருப்பினும் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கத்தின் பிடியில் இருந்த மக்களுக்கு வருணபகவான் கருணை காட்டியுள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.