தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ‘திடீர்’ ஆய்வு

தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் வேலூர் சரக டி.ஐ.ஜி. ‘திடீர்’ ஆய்வு.

Update: 2020-04-29 04:18 GMT
குடியாத்தம்,

குடியாத்தம் டவுன், காட்பாடி ரோடு மற்றும் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி திடீரென ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக-ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் டி.ஐ.ஜி. காமினி ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த போலீசார் மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் இந்த சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்ய வேண்டும். மேலும் வாகன அனுமதி சான்றிதழ் சரிபார்த்த பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். சந்தேகத்துக்கிடமான வகையிலும், உரிய அனுமதி இன்றி வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார், சரக்கு வாகனங்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்று டி.ஐ.ஜி. காமினி அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உள்ளிட்ட போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்