ரேஷன் கடைகளில் வினியோகிக்க நிவாரண பொருட்களை பொட்டலமிடும் பணி மும்முரம்
கோவை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வினியோகிக்க நிவாரண பொருட்களை பொட்டலமிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற 2-ந்தேதி முதல் ‘டோக்கன்’ வழங்கப்படுகிறது.
கோவை,
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அரிசி கார்டு வைத்து இருப்பவர்களுக்கு கடந்த மாதம் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது. அதேபோல் இந்த மாதமும் இலவச பொருட்கள் 4-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் 10 லட்சத்து 23 ஆயிரம் அரிசி கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
2-ந்தேதி முதல் டோக்கன்
இதன்படி ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்பட உள்ளது. வருகிற 2 மற்றும் 3-ந்தேதி டோக்கன் வழங்கப்பட்டு 4-ந்தேதி முதல் பொருட்கள் வழங்கப்படும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.500-க்கு தொகுப்பு
பருப்பு, உளுந்து உள்ளிட்ட 19 வகையான பொருட்களை மலிவு விலையில் ரூ.500-க்கு தொகுப்பாக வழங்கப்படுகிறது. இந்த பணி கூட்டுறவு சங்க தலைமை பதிவாளர் பழனிசாமி மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் ரூ.500 விலையில் பொருட்கள் வழங்க அதனை பொட்டல மிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 42 ஆயிரம் தொகுப்புகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சில பொருட்கள் அந்தந்த ரேஷன் கடைகளிலேயே பாக்கெட்டுகளில் வழங்கப்படும். வருகிற 4-ந்தேதி முதல் இந்த பொருட்களை அந்தந்த ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.