பழனி அருகே குப்பைகளுக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள்

பழனி அருகே குப்பைகளுக்கு தீ வைக்கும் மர்ம நபர்கள்.

Update: 2020-04-28 00:55 GMT
நெய்க்காரப்பட்டி,

பழனி அருகே உள்ள கொழுமம் கொண்டான் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் சிலர் இரவு நேரத்தில் லாரிகளில் குப்பைகளை கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் காற்று மாசுபட்டு பொதுமக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினமும் மர்ம நபர்கள் சிலர் கொழுமம்கொண்டானில் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டி தீ வைத்து சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் பழனி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இவ்வாறு குப்பைகளை கொட்டி தீவைத்து செல்லும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்