தமிழக-ஆந்திர எல்லையின் குறுக்கே தடுப்புச்சுவர் இருமாநில போக்குவரத்து அடியோடு துண்டிப்பு
தமிழக-ஆந்திர மாநில எல்லையில் சைனகுண்டா அருகே குடியாத்தம்-பலமநேர் சாலையின் குறுக்கே தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளதால், இரு மாநில வாகனப் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் வருவதும் தடைப்பட்டுள்ளது.
குடியாத்தம்,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதி ஆந்திர மாநிலத்தையொட்டி உள்ளது. குடியாத்தத்தில் இருந்து ஆந்திரா செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தமிழக எல்லைக்குள் பரதராமி உள்ளது. பரதராமி-சித்தூர் சாலையில் ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் தான் ஆந்திர மாநில எல்லை தொடங்குகிறது. அதேபோல், குடியாத்தத்தில் இருந்து பலமநேர் செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தூரத்தில் சைனகுண்டா சோதனைச் சாவடி உள்ளது. இங்கிருந்து ஒருசில கிலோ மீட்டர் தூரத்தில் தான் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்ட எல்லை தொடங்குகிறது.
மேற்கண்ட சாலைகள் மார்க்கமாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து குடியாத்தம் வழியாக வட மற்றும் தென் மாவட்டங்களுக்குத் தேவையான காய்கறிகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள், சிமெண்டு, கிரானைட் கற்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கனரக வாகனங்கள் மூலமாக வந்து செல்கின்றன. குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டாவில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் பலமநேர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாகப் பல்வேறு வாகனங்கள் வெளி மாநிலங்களுக்கு வந்து செல்கின்றன.
தடை விதிக்க முடிவு
தற்போது கொரோனா ஊரடங்கால் சைனகுண்டா சோதனைச் சாவடியில் வனத்துறை, காவல் துறை, வருவாய்த்துறையினரும், மருத்துவக் குழுவினரும் இணைந்து 30-க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனைச் சாவடி வழியாகக் காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களான பால், மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை ஏற்றி வரும் லாரிகளுக்கு கிருமி நாசினி தெளித்து, தீவிர வாகனச் சோதனைக்குப் பின்னரே தமிழக எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தன. பலமநேர் பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. சமீபத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தமிழகத்தில் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் சைனகுண்டா சோதனைச் சாவடியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநிலம் செல்லும் சாலையும், பங்காருபாளையம் செல்லும் சாலையும் இணையும் முன்பே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. குடியாத்தம் தாசில்தார் வச்சலா, வட்டார வளர்ச்சி அலுவலர் பாரி, குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், வனவர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் சைனகுண்டா கிராமம் அருகில் பண்டலத்தொட்டி திரும்பும் வழிக்கு முன்பாக தமிழக எல்லைப் பகுதியில் 30 அடி நீளத்துக்கு சாலையின் குறுக்கே 4 அடி உயரம் மற்றும் 3 அடி அகலத்துக்கு தொட்டிப்போல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. இது, ஹாலோ பிரிக்ஸ் கல்லால் ஆனதாகும்.
தொட்டிபோல் கட்டப்பட்டுள்ள தடுப்புச்சுவருக்கு இடையே 3 அடி அகலத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. வேகமாக வாகனங்கள் வந்து தடுப்புச்சுவர் மீது மோதாமல் இருக்க தடுப்புச்சுவருக்கு சற்று தூரத்தில் சாலையின் இரு பக்கமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குடியாத்தம் நகரில் இருந்து சைனகுண்டா செல்லும் சாலையில் சித்தூர் கேட் பகுதியில் வாகனங்கள் செல்லாமல் இருக்க சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பலமநேரில் இருந்து குடியாத்தம் வழியாக காய்கறிகள், பால், தீவனம் ஆகியவற்றை ஏற்றி வரும் லாரிகள் முற்றிலும் வராமல் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் இரு மாநில போக்குவரத்தும் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் பலமநேர் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் இருந்தது தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் தக்காளி பாரம் வேலூர் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறது. தக்காளி வரத்து தடைப்பட்டதால் தமிழகத்தில் விலை உயரும் அபாயம் உள்ளது. சைனகுண்டா அருகே சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் மறு உத்தரவு வரும் வரை இருக்கும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
பொன்னை
இதேபோல் பொன்னையை அடுத்த தெங்கால் அருகே தமிழக எல்லையை மூடும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். இதையடுத்து தெங்கால் அருகே உள்ள பொன்னை - சித்தூர் சாலையின் குறுக்கே சுவர் கட்டி அதிகாரிகள் முன்னிலையில் எல்லை மூடப்பட்டது.