ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி பகுதிகளில் வீடுகளில் கருப்புகொடி கட்டி விவசாயிகள் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், காரியாபட்டி பகுதிகளில் வீடுகளில் கருப்புகொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

Update: 2020-04-25 23:19 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பகுதியில் சிறு, குறு விவசாயிகளுக்கு ஐகோர்ட்டு அறிவித்த ரூ.10 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் வசூல் செய்வதை 1 வருட காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும். ஏழை மக்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். 

100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களை விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தி ரூ.260 சம்பளம் முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வீடுகள் தோறும் கருப்புகொடி கட்டும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மம்சாபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் வீடுகள் தோறும் கருப்புகொடி கட்டி போராட்டம் நடத்தினர். 

இதேபோல் காரியாபட்டி அருகே எஸ்.மறைக்குளம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வீடுகள்தோறும் கருப்புகொடி கட்டி போராட்டம் நடத்தினர். மேலும் விவசாயிகளின் நிலையை அரசு உணர்ந்து உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்