பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு அலுவலக பணிகள் 33 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்கின

தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.

Update: 2020-04-25 06:07 GMT
பெரம்பலூர், 

தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தில் மேலும் சில பணிகளுக்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நூறு நாள் வேலை நடந்தது. இதில் குறைந்த அளவே பணியாளர்கள் ஈடுபட்டார்கள். அவர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி விட்டும் பணிபுரிந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை அளிக்கும் மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகப்பணிகள் 33 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்கின.

மேலும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவு, உதவி இயக்குனர், கிராம ஊராட்சிகள் தணிக்கை அலுவலகம், திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி மகிமை அலுவலகம் ஆகியவற்றில் 33 சதவீத ஊழியர்களை கொண்டு இயங்கின.

அவர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பணிபுரிந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பாசன பணிகள், ஏரிகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட ஊரகப் பகுதியில் உள்ள கட்டுமான திட்ட பணிகள், அணைகள் பாதுகாப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற உத்தரவிட்டும், நேற்று அந்த பணிகள் நடைபெறவில்லை. செங்கல் சூளையில் பணிகள் நடைபெறவில்லை.

மேலும் செய்திகள்