எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்களுக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரிசோதனை
புதுவையில் முதல்-அமைச்சர், சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் நேற்று முன்தினம் நடந்தது. இதன் ஆய்வு முடிவுகள் நேற்று வந்தன. இதில் முதல்-அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கவனமாக இருக்கவேண்டும்
புதுவை எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நமது மக்கள் கவனமாக இருப்பது நல்லது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா பரிசோதனைகள் தொடங்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் அறிவுறுத்தல் காரணமாக ‘ரேபிட் கிட்’ பரிசோதனை நடத்தப்படவில்லை. அடுத்த கட்டமாக மக்களுடன் தொடர்புடைய அரசுத் துறை ஊழியர்களுக்கு பரிசோதனை செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.