தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன

தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் ஆயிரக் கணக்கான வாழைகள் சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரை பறந்தன.

Update: 2020-04-24 22:30 GMT
தாளவாடி, 

கோடை காலம் என்ப தால் தற்போது ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் கொரோனா பீதி யால் ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டுள்ளதால் பொது மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கிறார்கள். அவர்களை வெயில் வாட்டி எடுக்கிறது. வீட்டுக்குள் வீசும் மின்விசிறி காற்று வெப்பமாக இருப்பதால் மிகவும் சிரமப்பட்டு வரு கிறார்கள்.

இந்த நிலையில் தாளவாடி பகுதியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 4 மணி அளவில் வானம் மேக மூட்டமாக காணப்பட்டது. பின்னர் சாரல் மழையாக ஆரம் பித்தது. சிறிது நேரத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையாக 20 நிமிடம் பெய்தது. மேலும் இக்களூர், தொட்ட காஜனூர், சூசைபுரம், கரளவாடி, திகனாரை, ஜோரைகாடு ஆகிய பகுதியிலும் மழை பெய்தது.

இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஜோரைகாடு கிராமத்தை சேர்ந்த தாமோதரன், மகேஷ், நாகநாயக்கர், தேவராஜ், குரு சாமி, சிதம்பரம், சண்முகவேல் ஆகியோரது தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நேந்திரன் ரக வாழைகள் உள்பட ஆயிரக்கணக்கான வாழைகள் முறிந்து நாசம் ஆனது. அதே போல் துரைசாமி என்பவரது மாட்டு கொட்டகை, துண்டன், மாதம்மா ஆகியோரது வீட்டின் மேற்கூரை சூறாவளிக்காற்றில் தூக்கி வீசப்பட்டது. நாகன் என்பவரது வீட்டின் சிமெண்ட் ஓடும் சூறாவளிக்காற்றில் பறந் தது. அப்போது வீட்டில் இருந்த நாகனின் மனைவி மற்றும் குழந்தைகள் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர். ஜோரகாடு ரங்கசாமி கோவில் அருகில் மின்கம்பம் முறிந்த தால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் பாதிப்படைந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘இன்னும் ஒரு மாதத்தில் வாழைகள் அறு வடைக்கு தயார் நிலையில் இருந்தது.

இந்த நிலையில் சூறாவளிக் காற்றால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாழைகள் முறிந்து நாசம் ஆனது. இது எங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு தரவேண்டும்’ என்றனர்.

இதேபோல் அம்மா பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அதிகாலை 3 மணி வரை இடி-மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. காற்றும் வீசியது. அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, சிங்கம் பேட்டை, சின்னப்பள்ளம், சித்தார், பூதப்பாடி, குறிச்சி, குருவரெட்டியூர், சனிசந்தை, சென்னம்பட்டி, கொமராய னூர், பூனாச்சி ஆகிய பகுதி களில் பரவலாக மழை பெய்தது.

அந்தியூரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மழை நீருடன் சாக்கடை நீர் கலந் தது. இதன் காரணமாக தவுட் டுப்பாளையத்தில் இருந்து மலை கருப்புசாமி கோவிலுக்கு செல்லும் பாதையில் சாக் கடை நீர் ஆறு போல் ஓடியது. அந்த வழியாக சென்ற இரு சக்கர மற்றும் சரக்கு வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் சாக்கடை நீர் செல்வதற்கு வடிகால் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும் செய்திகள்