ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

ஆப்பக்கூடல் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அமைச்சர் கே.சி.கருப்பணன் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

Update: 2020-04-23 22:00 GMT
அந்தியூர், 

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், முட்டைகள் மற்றும் அவர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், பாதுகாப்பு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆப்பக்கூடல் பேரூராட்சி செயல் அதிகாரி ஹேமலதா தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கலந்துகொண்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் துப்புரவு பணியாளர்களிடம் அமைச்சர், ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையான இடங்களுக்கு கிருமிநாசினி அவ்வப்போது தெளிக்க வேண்டும், தாங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறினார். 

இதைத்தொடர்ந்து ஆப்பக்கூடல் பேரூராட்சி பகுதியில் சுகாதார பணிகளை அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள், பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்