தூத்துக்குடியில் ஊரடங்கு நேரத்திலும் ரோட்டில் அணிவகுத்த வாகனங்கள்
தூத்துக்குடியில் ஊரடங்கு நேரத்திலும் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து வந்தன.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ஊரடங்கு நேரத்திலும் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் அணி வகுத்து வந்தன.
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவை களுக்காக மட்டும் மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்ற னர். பொருட்கள் வாங்கு வதற்கு மதியம் 1 மணி வரை மட்டுமே கடைக்கு செல்ல வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டு வருகிறது.
அத்தியாவசிய தேவை இல்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 483 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 937 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் பயன்படுத்திய 1,383 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஏராளமான வாகனங்கள்
இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடியில் முக்கிய ரோடுகளில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து வந்தன. பெரும்பாலான மக்கள் ஒரே நேரத்தில் கடைகளுக்கு சென்றதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.