நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 213 பேர் மீது வழக்கு 151 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 213 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 151 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2020-04-22 01:15 GMT
நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 213 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 151 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கண்காணிப்பு பணி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக நாகை மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கு போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஊரடங்கு உத்தரவை மீறி வீதிகளில் தேவையின்றி சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

நேற்று முன்தினம் மட்டும் ஊரடங்கை மீறியதாக 213 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

151 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 1 நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மது விற்பனையை தடுக்கும் விதமாக இதுவரை 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் கொரோனா தொற்று குறித்து வதந்தி பரப்பியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்