நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மூலிகை சூப் வீடு, வீடாக சென்று வழங்கிய இளைஞர்கள்
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கை வழியை பின்பற்றி பல்வேறு மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர்.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகில் உள்ள நெருஞ்சிக்கோரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கை வழியை பின்பற்றி பல்வேறு மரக்கன்றுகளை வைத்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் போன்ற எந்த நோய்க்கும் அடிப்படை காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவே என்ற இயற்கை மருத்துவ கோட்பாட்டின் படி நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் வகையில் கீரைகளின் இராணி என அழைக்கப்பெறும் முருங்கை கீரையில், மிளகு, சீரகம், மஞ்சள் தூள், சின்ன வெங்காயம் உப்பு கலந்து மூலிகை சூப் தயாரித்து கிராமத்தில் உள்ள 300 பேருக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.