சரக்குகளை அனுப்பும் வகையில் சென்னையில் இருந்து சொரனூர் வரை ரெயில் சேவை நீட்டிப்பு - இன்று முதல் இயக்கப்படுகிறது

சரக்குகளை அனுப்பும் வகையில் சென்னையில் இருந்து சொரனூர் வரை ரெயில் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டு இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.

Update: 2020-04-18 23:00 GMT
திருப்பூர், 

சென்னையில் இருந்து கோவை வரை இயக்கப்பட்ட பார்சல் ரெயில் சேவை கேரள மாநிலம் சொரனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து சொரனூர் வரையும், சொரனூரில் இருந்து சென்னை வரையும் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 3-ந் தேதி வரை பார்சல் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட உள்ளது. 31 டன் சரக்குகளை எடுத்துச்செல்லும் வகையில் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ரெயில் ஈரோட்டுக்கு மாலை 5.15 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 5.50 மணிக்கும், திருப்பூருக்கு 6.35 மணிக்கும், கோவைக்கு இரவு 7.45 மணிக்கும், கேரள மாநிலம் சொரனூருக்கு இரவு 10.15 மணிக்கு சென்று சேருகிறது. பின்னர் அந்த ரெயில் மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 5.50 மணிக்கும்,திருப்பூருக்கு 6.45 மணிக்கும், ஊத்துக்குளிக்கு 7.20 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.10 மணிக்கும் சென்று மாலை 4.45 மணிக்கு சென்னையை சென்றடைகிறது.

உணவுப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், முககவசம், முழு உடற்கவசம் உள்ளிட்டவை ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சரக்குகளை அனுப்ப விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். திருப்பூர் ரெயில் நிலையத்தை 95431 52339 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்