பண்ணாரி அருகே தக்காளி பாரம் ஏற்றிவந்த சரக்கு ஆட்டோ மரத்தில் மோதியது

பண்ணாரி அருகே தக்காளி பாரம் ஏற்றிவந்த சரக்கு ஆட்டோ மரத்தில் மோதி தக்காளி பெட்டிகள் கீழே விழுந்து சிதறின.

Update: 2020-04-17 21:30 GMT
பவானிசாகர், 

தாளவாடி மலைப்பகுதியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு சரக்கு ஆட்டோ ஒன்று நேற்று காலை சத்தியமங்கலம் -மைசூர் சாலையில் கோவை நோக்கி சென்றுகொண்டு இருந்தது. பண்ணாரி அடுத்துள்ள புதுக்குய்யனூர் பிரிவு அருகே இந்த லாரி சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது.

இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். மரத்தில் மோதிய வேகத்தில் சரக்கு ஆட்டோவில் இருந்த தக்காளி பெட்டிகள் கீழே விழுந்தன. இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சரக்கு ஆட்டோவில் இருந்து கீழே விழுந்த தக்காளி பழங்களை பொறுக்கிச்சென்றனர். மேலும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் தக்காளி பழங்களை எடுத்துச்சென்றனர். இதன் காரணமாக சரக்கு ஆட்டோவில் இருந்து கீழே கொட்டிய அனைத்து தக்காளி பழங்களும் சிறிது நேரத்தில் காலியானது.

மேலும் செய்திகள்