தாராவியில் 60 பேருக்கு கொரோனா - உயிரிழப்பு 8 ஆக உயர்வு

தாராவியில் இதுவரை 60 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழப்பு 8 ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2020-04-15 23:11 GMT
மும்பை, 

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தாராவியில் கொரோனாவை தடுக்க சுகாதார துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று தாராவியில் மேலும் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 5 பேருமே தாராவி முகுந்த் நகரை சேர்ந்தவர்கள். இதில் 3 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

5 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆகி உள்ளது.

மேலும் ஒருவர் சாவு

தாராவியில் ஏற்கனவே 7 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருந்தனர். இந்தநிலையில் சயான் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபர் பலியாகி உள்ளார். இவர் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர் ஆவார்.

இதன் மூலம் தாராவியில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்து உள்ளது.

மேலும் செய்திகள்