கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் வசித்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சளி பரிசோதனை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் வசித்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2020-04-13 22:15 GMT
கிருஷ்ணராயபுரம், 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அந்த பெண்ணும், அவருக்கு பிறந்த குழந்தையும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியில் செல்லவும், வெளியிலிருந்து வருபவர்கள் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலையில் பஞ்சப்பட்டி மருத்துவ தலைமை அதிகாரி டாக்டர் ஷகிலா தலைமையில் மருத்துவ குழுவினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 20 பேருக்கு சளி மற்றும் தொண்டை பரிசோதனை நடத்தப்பட்டது.

அதுமட்டுமின்றி ஆய்வுக் காக ரத்தமும் எடுக்கப் பட்டது. மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா? என்றும் கணக்கெடுத்தனர். அதேநேரத்தில் கொரோனா எவ்வாறு பரவும், முன்னெச்சரிக்கையை கடைபிடிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் செய்திகள்